47
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி குவைத் சிறையில் வாடும் மீனவர் 4 பேரை மீட்டு தரக்கோரி அவர்களது குடும்பத்தார் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடிகாந்தி நகரைச் சேர்ந்தவர் முத்து. இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன், மீன்பிடி தொழிலுக்காக குவைத் நாட்டிற்குச் சென்றார்.கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது போதைப்பொருள் வைத்திருந்ததாக கார்த்திக், வினோத்குமார், ஜேசு, சந்துரு ஆகியோரை குவைத் மரைன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அந்நாட்டு சட்ட நடைமுறைகள், அந்நாட்டு மொழி தெரியாமல்.குவைத் சிறையில் வாடும் 4 பேரையும் விரைவாக மீட்டு ஒப்படைக்க வேண்டும் என கார்த்திக், வினோத்குமார், ஜேசு, சந்துரு ஆகியோரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
You must be logged in to post a comment.