இந்திய படகுகள் தொடர்பான வழக்கு தள்ளுபடி -யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு

எல்லை தாண்டி வந்த இந்திய படகுகளை அரசுடமையாக்குமாறு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக்கோரி படகு உரிமையாளர்கள் சார்பில் தொடர்ந்த வழக்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் நெடுந்தீவு கடவில் கைது விவகாரம் தொடர்பாக இந்திய இழுவை மூன்று படகுகளை புதிய கடல் வள பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரசுடமையாக்குமாறு  ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து வருகை தந்த படகுகளின் உரிமையாளர்கள் இத்தீர்ப்பை ரத்து பரிசீலிக்க கோரி யாழ்ப்பாணம், ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நீதிபதி யூட்சன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. உரிமையாளர்களுக்கு போதிய அவகாசம் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்தது. உரிய கால வரம்பிற்குள் உரிமை கோரவில்லை. இதனால் படகுகள் அரசுடமை ஆக்கப்பட்டதை சுட்டிக்கட்டி நீதிபதி இந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

செய்தி :- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்