Home செய்திகள்உலக செய்திகள் மண்டபம் முகாமில் ஆக.18ல் மீனவர் சந்திப்பு மாநாடு… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..

மண்டபம் முகாமில் ஆக.18ல் மீனவர் சந்திப்பு மாநாடு… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..

by ஆசிரியர்

ராமநாதபுரம், ஆக.4

ராமநாதபுரம்  மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். மீனவர்களிடம் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கேட்டறிந்தார்.

அவர் தெரிவிக்கையில், ஆக. 18ல் நடைபெறவுள்ள மீனவர் மாநாட்டில் பங்கேற்று மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ராமநாதபுரம் வருகிறார். அன்றைய தினம் மீனவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை வழங்க உள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் சங்க பிரதிநிதிகளிடம் கலந்துரையாடியபோது 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். மீன்பிடி இறங்கு தளத்தில் உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், டீசல் மானியம் உயர்த்தி தர வேண்டுதல், மீன்பிடி தடைக்காலம் நாட்களை குறைக்க வேண்டுதல், இலங்கை அரசால் பிடிக்கப்படும் படகுகளை மீனவர்களுடன் சேர்த்து விடுதலை செய்ய வேண்டுதல், மீனவர்களுக்கான ஓய்வூதிய வயது வரம்பை உயர்த்துதல், அரசு நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பதிவு முறை இணையதளத்தில் ஏற்படும் தவறுகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டுதல், நீண்ட நாளாக மீனவர்கள் குடியிருக்கும் பகுதியில் மீனவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்தனர். இணையதளத்தில் பதிவேற்ற முறையில் ஏற்பட்டுள்ள தவறுகளை சிறப்பு முகாம் அமைத்து ஒரு வார காலத்திற்குள் சரி செய்து அரசு நிவாரணத்தொகை பெறாதவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீன் இறங்கு தளம் மற்றும் மீனவர் குடியிருப்பு பகுதிகளில் மீன்வளம்-மீனவர் நலத்துறை மூலம் உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்து தரப்படும், சாலை வசதிகp, குடிநீர் குழாய் இணைப்புகள் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்து கொடுக்கப்படும். மீனவர்களுக்கான  முக்கிய கோரிக்கைகள் மற்றும் முக்கிய திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்க உள்ளார். ஆக.18 அன்று நடைபெறும் மீனவர் மாநாட்டில் குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டு தங்கள் தேவைகளை தமிழ்நாடு முதலமைச்சரிடம் பெற்று பயனடைய வேண்டும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் புதிய மீன்பிடி இறங்குதளம் அமைப்பதற்கும் மற்றும் குந்துகால் பகுதியில் உள்ள மீன்பிடி இறங்குதளத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், சென்னை தலைமை பொறியாளர் மீன்பிடி துறைமுகம் வி.ராஜு, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜல, காவல் கூடுதல் கண்காணிப்பாளர் காந்தி, உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மீன்வளத்துறை துணை இயக்குநர்கள் பிரபாவதி, காத்தவராயன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:- முருகன்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!