வேடசந்தூரில் பாலித்தீன் பைகள் மறுசுழற்ச்சி மூலப்பொருள்கள் தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கோவில் ரோட்டில் அமைந்துள்ள சவடமுத்து என்பவருக்கு சொந்தமான பழைய பாலிதீன் பைகளை வாங்கி மறு சுழற்சி முறையில் பாலிதீன் பைகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை தயார் செய்து வரும் கம்பெனி உள்ளது.

இந்த கம்பெனியில் காலை நான்கு மணி அளவில் மின்கசிவால் தீ பிடித்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் முழுமையாக தீயில் கருகி சேதமடைந்தன. வேடசந்தூர் தீயணைப்பு துறை மற்றும் திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர் இதுகுறித்து வேடசந்தூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.