காய்ச்சல் நகரமாக மாறி வரும் கீழக்கரை, தொடர்ந்து போராடும் நகராட்சி நிர்வாகம்..

கீழக்கரையில் கடந்த சில மாதங்களாகவே டெங்கு, மலேரியா மற்றும் பெயர் அறியாத, புரியாத பல மர்ம காய்ச்சல்கள் பரவி வருகின்றன.  சமீபமாக இத்துடன் பன்றி காய்ச்சலும் மக்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

கீழக்கரையில் காய்ச்சலால் அதிகமாக 13, 14 மற்றும் 14 வது வார்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது பற்றிய செய்தியும் தொடர்ச்சி ஆக நம் வலைத்தளத்திலும் பதிந்து வருகின்றோம். இதனை ஒழிக்கும் முயற்சியாக நகராட்சியும் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

தற்சமயம் போர்கால நடவடிக்கையாக நகராட்சி நிர்வாகம் இரவு பகல் பாராது பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் கொசு அழிக்கும் புகை மற்றும் மருந்து அடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அதுபோல் ஊரில் உள்ள பொது மக்களும் குடியிருக்கும் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குப்பைகள் மற்றும் தண்ணீரை தேங்கி விடாமல் பேணிக்கொள்வது மிக அவசியம். அவ்வாறு செய்வது மூலம் நோயில் இருந்தும் தற்காத்துக் கொள்ள முடியும்.