Home செய்திகள் கீழக்குயில்குடி கிராமத்தில் 12 ஆண்டுக்கு பின் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழா..

கீழக்குயில்குடி கிராமத்தில் 12 ஆண்டுக்கு பின் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழா..

by ஆசிரியர்

கீழக்குயில்குடி கிராமத்தில் 12 ஆண்டுக்கு பின் நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழாமலையடி கருப்பசாமி அய்யனார் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா குதிரை எடுப்பு திருவிழாவில் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கீழக்குயில்குடி மலையடி கருப்பசாமி அய்யனார் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. புரட்டாசி பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வாக கூறி எடுப்பு திருவிழா நடைபெறும். 

மழைவளம் பெறவும் விவசாயம் செழிக்கவும் வேண்டி கிராமத்து மக்கள் குதிரை எடுப்பு திருவிழா நடத்துகின்றனர் இந்நிலையில் கிழக்குயில் குடி மலையடி கருப்பசாமி அய்யனார் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு விளாச்சேரி கிராமத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி முறைப்படி ஐந்தடி உயரமும் இரண்டடி அகலமும் கொண்ட மண் குதிரைகள் தயார் செய்யப்பட்டன

அவற்றை  விளாச்சேரி கிராமத்தில் இருந்து 21  குதிரைகள் அலங்கரிக்கப்பட்டு மூன்று தேவர் வகையறவான கீழக்குயில்குடி கிராமத்தினர் சம்பிரதாய முறை ப்படி பூஜைகள் முடித்து 21 குதிரைகளும்

தட்டானுர்  வழியாக கீழக்குயில்குடி கிராமத்தில் கண் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் கருப்பு கோயில் எடுத்துச்சென்று நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கீழக்குயில்குடி மலையடி கருப்பசாமி அய்யனார் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா 12  ஆண்டுகள் கழித்து திருவிழா நடைபெறுகிறது. இதனை ஒட்டி கீழக்குயில் குடி கிராமத்தினர் குதிரை எடுப்பு திருவிழாவை மிக விமர்சையாக கொண்டாடினர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com