கச்சத்தீவு திருவிழா கோலாகல துவக்கம் ..

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய சிலுவைப் பாதை திருவிழா ஆண்டுக்கு ஒரு முறை 2 நாள் நடைபெறுகிறது. இதில் தமிழகம் மற்றும் இலங்கை பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்வர். இந்தாண்டு திருவிழாவில் கலந்து கொள்ள 64 விசைப் படகுகளில் 1,591 ஆண்கள், 369 பெண்கள், 43 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர் 1 என் 2,027 பேரும், 15 நாட்டுப் படகுகளில் 202 பேர் என 2,229 பக்தர்கள் பாதுகாப்பு கவசம் அணிந்து கிளம்பிச் சென்றனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வழியனுப்பினார்.

புனித அந்தோணியார் தேவாலய திருவிழா யாழ் மறை மாவட்ட ஆயர் ஞானபிரகாசம், பங்கு தந்தைகள் எமில்பால் (நெடுந்தீவு), தேவசகாயம் (வேர்க்கோடு) மற்றும் இலங்கை, இந்திய பக்தர்கள் முன்னிலையில இன்று (மார்ச் 15) மாலை சிறப்பு திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடந்தது. நாளை (மார்ச் 16) காலை விழா நிறைவு திருப்பலியுடன் கொடி இறக்கப்படுகிறது.

வடக்கு மாகாண கடற்படை கட்டளை தளபதி சில்வா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.