இராமநாதபுரம் பாத்திமா கல்வி அறக்கட்டளை 11 ஆம் ஆண்டு துவக்கவிழா!

இராமநாதபுரம் பாத்திமா அறக்கட்டளை சார்பி ல் 11 ஆம் ஆண்டு துவக்கவிழா மற்றும் புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஜாஸ் கேட்டரிங் கல்லூரி வளாகத்தில்  நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஏ.முகமது சலாவுதீன் தலைமையேற்றார். ஆசிரியை விமலா வரவேற்புரையாற்றினார். இந்த விழாவில் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார்.  ரோட்டரி கிளப் பட்டயத்தலைவர் ஜெ.தினேஷ்பாபு,  சேதுபதி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் விழாவில் சுப்புத்தேவன் சோமசுந்தரம், புதுமடம் ராமனாதன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.  நிகழ்ச்சியை ஆசிரியை ஜெயராணி தொகுத்து வழங்கி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.