Home செய்திகள்கீழக்கரை செய்திகள் சிறிய வயது.. அதீத திறமை… சாதாரண பொருட்களை வைத்து தத்ரூபமாக சிறிய (Miniature) வடிவில் பல பொருட்கள்..

சிறிய வயது.. அதீத திறமை… சாதாரண பொருட்களை வைத்து தத்ரூபமாக சிறிய (Miniature) வடிவில் பல பொருட்கள்..

by ஆசிரியர்

மாத்தி யோசி.. ஆம் மாத்தி யோசித்தால் பல சிந்தனைகளும் ஆற்றல்களும் உருவாகும்.  இதற்கு வயது ஒன்றும் தடையில்லை… ஆர்வமும் உற்சாகமும் இருந்தால் போதும்.  இதற்கு உதாரணமாகவும், அடையாளமாகவும் திகழ்கிறார் கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சேக் அஹமது ஹம்தான் என்பவருடைய மகன் முஹம்மது அப்துல் ஹாதி.

பொதுவாக சிறுவர்கள் என்றால் விளையாட்டு, பாட்டு, வரைதல் என்ற விசயத்திலேயே கவனம் செலுத்த கூடியவர்களாக இருப்பார்கள்.  ஆனால் இச்சிறுவன் வீட்டில் உள்ள சாதாரண மற்றும் உபயோகப்படுத்திய பொருட்களை வைத்தே மிகவும் தத்ரூபமாக சிறிய (Miniature) வடிவில் கண் கவர் டேபிள், சேர், டிரஸ்ஸிங் டேபிள், பீரோ போன்ற பொருட்களை கண் கவர் வகையில் செய்து அசத்தி வருகிறார்.

தற்சமயம் நிலவி வரும் சூழலில் வெளிய போக முடியாத நிலையில் குழந்தைகள் அதிகமாக டிவி மற்றும் கைபேசிகளிலேயே பொழுதை கழித்து வருகிறாரகள், ஆனால் குழந்தைகளின் தனித்திறமையை உற்சாகப்படுத்தும் விதமாகவும், மேம்படுத்தும் விதமாகவும் வழிநடத்தினால் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் நல்லது, தனிதிறமையை வளர்க்கவும் உதவும்.

திறமைகள் பலவிதம்… இவருடைய திறமையோ பாராட்டுதலுக்குரிய தனித்திறமைதான்… இத்தருணத்தில் நாமும் பாரட்டுவோம்.. உற்சாகப்டுத்துவோம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!