Home செய்திகள் அறிவியல் களியாட்டம்…எளிய அறிவியல் சோதனைகள்..

அறிவியல் களியாட்டம்…எளிய அறிவியல் சோதனைகள்..

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம்  எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் மஞ்சள் பை அறக்கட்டளை சார்பாக அறிவியல் களியாட்டம் என்ற நிகழ்வில் எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காட்டுதல் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. அறிவியல் ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராஜ வடிவேல் வரவேற்றார். சென்னையில் இருந்து அறிவியல் ஆசான் அறிவரசன் அவர்கள் வருகை புரிந்து செயற்கை ரத்தம் உருவாக்குதல், சினிமாக்களில் புகை உருவாக்கும் விதம், கார்களில் ஏர் பலூன் செயல்படும் விதம், நெருப்பு உருவாதல், பரப்பை பொறுத்து அழுத்தம் எவ்வாறு மாறுகிறது என்ற சோதனை,  ஒளி உருவாதல்,  நுரை உருவாக்கும் சோதனை, புகை உருவாதல் போன்ற பல வகையான சோதனைகளை செய்து காண்பித்து அறிவியல் மனப்பான்மை என்றால் என்ன? என விளக்கினார். ஏன்? எதற்கு? எப்படி? எனக் கேள்வி கேட்டு விடை காண முயற்சி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் விஞ்ஞானி ஆக்கம் சங்கர், மஞ்சப்பை அறக்கட்டளை நிறுவனர் கிருஷ்ணன், கல்வி பிரிவு  ஒருங்கிணைப்பாளர் முகமது கனி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியை அருவகம் நன்றி கூறினார். விழாவில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்P

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com