வாணியம்பாடி அருகே முன்னாள் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்..

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இன்று 25ம் தேதி இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாணியம்பாடி எம் எல் ஏ மற்றும் தொழிலாளர் நல அமைச்சர் நீலோபர் கபில் வழங்கினார்.

விழாவிற்கு பேரூராட்சி அதிமுக செயலாளர் பிச்சாண்டி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர்கள் நாராயணன், ரவி உள்ளிட்ட கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார், வேலூர்