மருத்துவ முகாம் ஏர்வாடியில் சிறப்பாக நடைபெற்றது …

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கிராமத்தில் உள்ள அல் மஸ்ஜிதுல் ஜாமிஆ மதரஸா வளாகத்தில் 10/12/2017 ஞாயிற்றுக்கிழமை இன்று மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் ஏர்வாடி மக்கள் நல சங்கம் மற்றும் UNWO மூலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இம் முகாமில் புளு மாடர்ன் மருத்துவமனை மருத்துவர்கள் Dr. பிரகாஷ் M.B.B.S., DA, DNB, Dr. சர்மிளா சுரேஷ் M.s., MCH (Vascular), Dr. தேவகி M.s. (OG)DNB (OG), Dr.வினோதினி M.B.B.S., M.C.H (Physchiatrist) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இம்முகாம் மூலம் ஏர்வாடி பொது மக்களில் 248 பேர் பயன்பெற்றனர். 17 பேருக்கு இருதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி இருப்பது கண்டறியப்பட்டது. 29 பேருக்கு வெஸ்குலர், தொண்டையில் சதை வளர்ச்சி, கர்ப்பப்பை தொடர்பான பிரச்சினைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்க்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 21 பேருக்கு ECG இலவசமாக எடுக்கப்பட்டது.

மனநலம் சார்ந்த மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. மேலும் தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரி சார்பாக 12 லேப் டெக்னீசியன்கள் இம்முகாமில் சேவை புரிந்தனர். இவர்கள் மூலம் இரத்தத்தின் வகை மற்றும் இரும்புச்சத்தின் அளவு இலவசமாக கண்டறியப்பட்டது.

முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் சோதிக்கப்பட்டது. இம் முகாம்ஏ ர்வாடி மக்கள் நல சங்கம் மற்றும் UNWO மூலம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.