Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ஏர்வாடி சந்தனக் கூடு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது..

ஏர்வாடி சந்தனக் கூடு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் அல் குத்பு சுல்தான் செய்ய து இப்ராஹிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா 845 ஆம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழா நடத்தப்படும் ஏர்வாடி பாதுஷா நாயகம் சந்தனக் கூடு விழாவில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்கள் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். நடப்பாண்டு விழா 04/7/2019 ஆம் தேதி, பாதுஷா நாயகத்தின் மவுலீது ( புகழ் மாலை) உடன் விழா துவங்கியது. இதனைதொடர்ந்து, தர்ஹா வளாகத்தில் 13/7/19 மாலை அடி மரம் ஏற்றப்பட்டது.

இன்று( 14/7/19) மாலை 4 மணியளவில் மேள, தாளம் முழங்க யானை, குதிரை முன் செல்ல அலங்கரிக்கப்பட்ட கூடு ஏராளமான மக்கள் பின் தொடர வானில் வர்ண ஜாலம் காட்டிய வான வேடிக்கைகளுடன் ஊர்வலமாக தர்கா வந்தடைந்தது. இரவு 7:40 மணியளவில் கொடியேற்றப்பட்டது. இதை தொடர்ந்து 26/7/2019 ஆம் தேதி மாலையில் தொடங்கும் சந்தனக் கூடு ஊர்வலம், 27/7/19ஆம் தேதி அதிகாலை வரை நடக்கிறது. இதன் தொடர் நிகழ்வாக பாதுஷா நாயகத்தின் ரவுலா ஷரீபிற்கு புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.

02/8/19 மாலை 5 மணியளவில் கொடியிறக்கப்படுகிறது. அன்றிரவு 7 மணியளவில் தப்ரூக் (நெய் சாதம்) பிரசாதம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்ஹா ஹக்தார் மகா சபையினர் செய்துள்ளனர்.

.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!