ஏர்வாடி கடற்கரை பகுதியில் கஞ்சா பறிமுதல்..

கீழக்கரை, ஏர்வாடி கடற்கரை பகுதியில் இன்று 350 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடலோர காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சோதனையிட்ட போது கஞ்சா பிடிபட்டது. பின்னர் ஏர்வாடி காவல்துறையினரின் தீவிர சோதனையில் இச்சம்பவம் தொடர்பாக நான்கு நபர்கள் தனியார் விடுதியில் பிடிபட்டனர். இதன் தொடர்பாக பயன்படுத்திய கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரனையின் போது, கைப்பற்ற பட்ட 350 கிலோ கஞ்சாவை சின்ன ஏர்வாடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்தது தெரிய வந்துள்ளது. பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு 30 லட்சம் வரை இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. மேலும் இதை கடத்துவதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னர் கருப்பசாமி என்பவரிடம் இருந்து சுமார் 1,10,000 ரூபாய்க்கு நாட்டு படகு வாங்கியது தெரியவந்துள்ளது.

கைது செய்ய்யப்பட்ட அருண் பிரசாத், கலீல் அஹமது, முனியசாமி மற்றும் அஜ்மால்கான் ஆகியோர் மீது ஏர்வாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்கள்.