Home செய்திகள்மாநில செய்திகள் ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், அவரது மனைவி பெயரில் ரூ.648 கோடி சொத்துகள்..

ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், அவரது மனைவி பெயரில் ரூ.648 கோடி சொத்துகள்..

by Askar

ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், அவரது மனைவி பெயரில் ரூ.648 கோடி சொத்துகள்..

அசோக்குமாரின் வங்கி கணக்குகளில் 6 கோடியே 99 லட்சத்து 59 ஆயிரத்து 500 ரூபாயும், மனைவியின் வங்கி கணக்குகளில் ரூ.3 கோடியே 83 லட்சத்து 78 ஆயிரமும் இருப்பு உள்ளது. அசோக்குமார் தனது கையிருப்பில் ரூ.10 லட்சமும், மனைவியின் கையிருப்பில் ரூ.5 லட்சமும் உள்ளது. அசோக்குமாரிடம் 10.1 கிலோ தங்க நகையும், மனைவியிடம் 10.6 கிலோ தங்க நகையும் உள்ளது. இருவருடைய பெயரிலும் வாகனம் இல்லை. 2 பேரின் பெயரிலும் வீடுகள், அலுவலகங்கள், காலி இடங்கள் உள்ளன.

அசோக்குமாருக்கு ரூ.526 கோடியே 53 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.56 கோடியே 95 லட்சம் அசையா சொத்தும் உள்ளன. மொத்தம் ரூ.583 கோடியே 48 லட்சத்து 9 ஆயிரத்து 500 மதிப்பிலான சொத்து உள்ளது.

அவரது மனைவிக்கு ரூ.47 கோடியே 38 லட்சத்து 78 ஆயிரம் அசையும் சொத்தும், ரூ.22 கோடியே 60 லட்சம் அசையா சொத்தும் உள்ளன. ஆற்றல் அசோக்குமார் தனது பெயரிலும் தனது மனைவி பெயரிலும் ரூ.648 கோடி சொத்துகள் இருப்பதாக பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com