Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் முக்கிய பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி..

கீழக்கரையில் முக்கிய பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி..

by ஆசிரியர்

கீழக்கரை பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யும் பணி இன்று (29/06/2019) காலை தொடங்கியது. இப்பணி கீழக்கரை கிழக்கு தெரு ரோடு, பீஸா பேக்கிரியில் தொடங்கி முஸ்லீம் பஜாரில்  சில இடங்களிலும், தச்சர் தெரு துவக்கம் உள்ள கடைகள் வரை ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெற்றது.

இப்பணி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) தனலெட்சுமி முன்னிலையில் சுகாதார ஆய்வாளர் பூபதி, தலைமை எழுத்தர் தமிழ் செல்வன், நகர் கட்டிட ஆய்வு அலுவலர் பார்த்த சாரதி, கார்த்திகேஸ்வரன், மேற்பாற்வையாளர்கள் மனோகரன், சக்திவேல், மின் ஊழியர் ரமேஷ் சுரேஷ் உட்பட நகராட்சி அலுவர்கள், மற்றும் தொழிலாளர்கள், நகராட்சி வாகனம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இவர்களுடன் கீழக்கரை காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றும் இடங்களில் சிறிது நேரம்  வாக்குவாதம் நடந்தது, பின்னர் அகற்றும் பணி தொடர்ந்தது.

இப்பணியை பிரதான சாலையில் அல்லாமல் 500 மீட்டர்  தள்ளி உட்தெருக்களில் நகராட்சியினர் ஆக்கிரமிப்புகள் அகற்றினர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக இடிக்கப்பட்ட பகுதிகளை முறையாக சீர் செய்வதோடு இல்லாமல், நடைமுறையில் ஆக்கிரமிப்புகளால் சிக்கி இருக்கும் வாகனம் நிறைந்த பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி முயற்சிக்க வேண்டும்.

தகவல்:-  மக்கள் டீம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!