Home செய்திகள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்புக்கு பதியும் வசதி..

பயின்ற பள்ளியிலேயே இணையதளம் மூலம் வேலைவாய்ப்புக்கு பதியும் வசதி..

by ஆசிரியர்

2018ஆம் ஆண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதையடுத்து, 16.07.2018 முதல் 30.07.2018 வரையிலான நாட்களில் மாணவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அது சம்பந்தமாக மாவட்ட  ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்’ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக 2011 ஆம் ஆண்டு முதல் நேரடியாக வேலைவாய்ப்பு துறையின் இணைய தளத்தில் https://tnvelaivaaippu.gov.in பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரியாது நேரடியாக இத்துறையின் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தியமையால், மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவு, காலவிரயம்ää தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் ஆகியவை தவிர்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தற்போது 2018ஆம் ஆண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் 16.07.2018 அன்று வழங்கப்படவுள்ளதை அடுத்து 16.07.2018 முதல் 30.07.2018 வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இவ்வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம்.

​மேலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் https://tnvelaivaaippu.gov.in இணைய தளத்தில்  தங்கள் அளவிலேயே இல் பதிவு செய்யலாம் அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

​எனவே மாணவர்கள் ஏற்கெனவே Onlineல்ப த்தாம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்து இருப்பின் அவ்வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று தாங்கள் பயின்ற பள்ளிகளை அணுகி பன்னிரெண்டாம் வகுப்பு கல்வித் தகுதியினை கூடுதலாக பதிவு செய்து கொள்ளலாம்.  பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று புதிதாக பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவுகள் மேற்கொள்ளலாம்.  பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணாக்கர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com