Home செய்திகள் இராமநாதபுரத்தில் ஆக.11ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்…

இராமநாதபுரத்தில் ஆக.11ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் தகவல்…

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஆக.8 – இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளையோர் பயன்பெறும் பொருட்டு தனியார் துறை வேலைகவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தெரிவு செய்து கொள்ளலாம். இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு முடித்த வேலைநாடுநர், ஐடிஐ, டிப்ளமோ படித்த வேலைநாடுநர் பங்கேற்று தங்கள் தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பு பெறலாம்.

இம்முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுநர், மாற்றுத்திறனாளி வேலைநாடுநர் தங்களின் சுய விபர விண்ணப்பம், அனைத்து அசல் கல்வி சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை, புகைப்படத்துடன் 11.8.2023 காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வந்து இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறை படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும். தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் “Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது. இவ்விணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்கள், வேலைதேடும் இளையோர் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com