Home செய்திகள் திருப்பரங்குன்றம் நீதிமன்றம் உத்தரவிட்டும் திருச்சி முகாமிற்கு வனத்துறையால் கொண்டு செல்லாத யானை .

திருப்பரங்குன்றம் நீதிமன்றம் உத்தரவிட்டும் திருச்சி முகாமிற்கு வனத்துறையால் கொண்டு செல்லாத யானை .

by mohan

அந்தமானை சேர்ந்தவர் மாசங் இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு மதுரையை சேர்ந்த இந்திரா என்பவருக்கு மாலாச்சி என்கின்ற பெண் யானையை அன்பளிப்பாக வழங்கினார் இந்த யானையை தெருக்களில் வைத்து பிச்சை எடுக்க வைத்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து சென்னையை சேர்ந்த வனவிலங்கு ஆர்வலர் முரளிதரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அந்த வழக்கில் யானை திருச்சியில் உள்ள தமிழக வனத்துறைக்கு சொந்தமான முகாமிற்கு சென்று ஒப்படைக்குமாறு கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து யானையை மீட்க வனத்துறையினர் திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சி என்ற கிராமத்தில் வைத்து பராமரித்து வந்தனர் திருச்சி முகாமிற்கு கொண்டு செல்ல வனத்துறை வாகனத்தில் வந்த ஆனால் யானை கொண்டு செல்லவில்லை இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர் பால்ராஜ் கூறுகையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் பிறகும் இத்தனை நாட்கள் யானையை திருச்சி முகமிற்கு உள்ள அனுப்பவில்லை. நீதிமன்ற உத்தரவை வனத்துறையினர் அமல்படுத்தாமல் தாமதம் செய்வதில் பல சந்தேகங்கள் உள்ளது. குறிப்பாக யானையை முகாமிற்க்கு அனுப்பாமல் மீண்டும் வியாபாரம் செய்யும் நோக்கில் தற்போது கால்நடை மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து நோய் தொற்று இருப்பதாக சான்றிதழ் அளித்து நீதிமன்ற உத்தரவை செயல் இழக்க செய்யும் வேலையில் ஈடுபடுவதாக தெரிகின்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!