மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிலுள்ளது எழுமலை கிராமம்.மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தின் பகுதியில் இப்பகுதியிலுள்ள எம்.கல்லுப்பட்டி- தாழையூத்து – வாழைத்தோப்பு- நல்லதாது நாயக்கன்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் மலை அடிவாரத்தின் பகுதியிலுள்ள தோட்டங்களில் சமீப காலமாக ஒற்றை காட்டு யானை உலாவருவதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று நள்ளிரவில் எம்.கல்லுப்பட்டி அய்யனார் கோவில் அருகில் இடும்பசாமி என்பவரது தோட்டத்தில் நள்ளிரவில் புகுந்த ஒற்றை யானை அங்கிருந்த நெற்பயிர்களை சேதப்படுத்தி விட்டு சென்றதாகக் கூறப்படுகின்றது.இதனை விவசாயி ஒருவர் தனது மொபைலில் படமெடுத்து அப்பகுதியில் அனைவருக்கும் அனுப்பியுள்ளார்.தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.ஒற்றை காட்டு யானை விளை நிலங்களுக்குள் இறங்கி சேதப்படுத்துவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.உயிர்சேதம் ஏதேனும் ஏற்ப்படும் முன் காட்டுயானையை வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலை மோகன் 81
You must be logged in to post a comment.