கீழக்கரையில் வாக்காளர் பெயர் சேர்த்தல்/திருத்தல் விண்ணப்ப மற்றும் விழிப்புணர்வு முகாம் …

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம், மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளையுடன் இனைந்து நடத்திய வாக்காளர் பெயர் சேர்த்தல்/திருத்தல் விண்ணப்ப மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று 30/09/2018 ஞாயிற்று கிழமை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 வரை மின்ஹாஜ் பள்ளி அருகில் நடைபெற்றது.

இந்த முகாமை இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் தலைவர் ஆலிம் முஹம்மது தவ்ஹீத் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளையின் தலைவர் நூருல் ஜமான் முகாமை துவக்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் பொருளாளர் சல்மான் கான் மற்றும் உறுப்பினர் அஹமது கபீர் செய்திருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக கீழக்கரை நகர் தமுமுக தலைவர் முஹைதீன் அடுமை, ஐக்கிய நல கூட்டமைப்பின் செயலாளர் அல்தாஃப், அஸ்ஃபாக் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது உறுப்பினர்கள் அஹமது சுஹைல்,அய்யுப் கான் ஆகியோர் உடனிருந்தனர். இந்த முகாமில் 200க்கும் அதிகமான புதிய வாக்காளர்கள் கலந்து கொண்டு வாக்காளர் அடையாள அட்டை விண்ணபித்து மற்றும் திருத்தம் செய்து பயன்பெற்றனர்.

வாக்காளர் சிறப்பு முகாம் பற்றிய செய்தியை தமிழக முழுவதும் கீழை நியூஸ், சட்ட விழிப்புணர்வு இயக்கம், கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் மற்றும் பூதக்கண்ணாடி மாத இதழ் சார்பாக விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வெளியிடப்பட்டது என்பதையும் இத்தருணத்தில்  அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றோம்.