மோடி அலை எழவில்லை.. மு.க.ஸ்டாலின் அலை வீசுகிறது….உதயநிதி பிரச்சாரம் ..

நெல்லை நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க வேட்பாளரான ஞான திரவியத்தை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், நான் கடந்த 12 நாட்களாக நான் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்துவருகிறேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதி வருவதை என்னால் காண முடிகிறது.

ஆனால் தற்போது மோடி அலை ஓய்ந்து விட்டது. மோடிக்கு எதிரான அலைதான் தமிழகம் முழுவதும் வீசிக் கொண்டிருக்கிறது. அத்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு அலை அனைத்துத் தொகுதிகளிலும் வீசுகிறது.

அதனால்,வரும் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் தி.மு.க கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. தீவிரவாதத்தை மோடி ஒழிக்கவில்லை. அவர் கொடுத்த எந்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறிவிட்டார். வரும் 18-ம் தேதி மோடி கெட்-அவுட் ஆகிவிடுவார். அவர்மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். இனியும் அவரை நம்பி ஏமாற மக்கள் தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர்:– அபுபக்கர்சித்திக்