Home செய்திகள்கீழக்கரை செய்திகள் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு வருமான வரி சோதனைக்கு உடன்பிறப்புகளே காரணமா…??

திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு வருமான வரி சோதனைக்கு உடன்பிறப்புகளே காரணமா…??

by ஆசிரியர்

திமுகவை பொறுத்தவரை பதவியில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து பொறுப்பு கொடுக்கப்படும், அவர்களே அதிகாரத்திலும் வருமானத்திலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவார்கள் அந்த நிலைதான் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்கு.

திமுகவில் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி பொருளாளர் பதவியை பிடித்தவர், துரைமுருகன் ஒருவரே. ஏன் எனில் திமுக அறக்கட்டளையின் சொத்துக்கள் அனைத்து விவரமும் துரைக்கு தெரியும்,  அதனால் தான் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பொறுப்பு. அதே போல் கேட்டவுடன் மு.க.ஸ்டாலின் துரைமுருகன் மகனுக்கு வேலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் சீட்டை கதிர் ஆனந்துக்கு வாரி வழங்கினார்.

மேலும் வன்னிய இனத்தை சேர்ந்த துரைமுருகன் பாமக ராமதாஸுடன் இணைய அனைத்து முயற்சிகளும் எனுத்தார், ஆனால் முடியவில்லை. வேலூர் தொகுதியில் வன்னியர் வாக்குகள் அதிகம், ஆனால் அதிமுக கூட்டணிக்கு பாமக சென்று விட்டதால் மேலும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் தேமுதிகவை எடா கூடமாக திட்டி திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்றினார். தேமுதிகவை கடுமையாக விமர்சித்த காரணத்தால் துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டனர். இந்த போராட்டம் தான் துரைமுருகனுக்கு எதிராக காட்பாடியில் நடந்த முதல் போராட்டம் இப்போது வருமான வரித்துறையால் தொடர்கிறது.

காட்பாடியில் தொடர்ந்து தனது கட்சியினரை 20 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைகளாக நடத்தி வருகின்றார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.  அதே போல் முதலியார்களையும், ஆதிதிராவிடர் அருந்ததியின மக்களையும் அவர் நடத்தும் முறையிலேயே இந்த கட்சியில் உள்ள அந்த இனத்தினர் இடிந்து போய் உள்ளனர்.

இப்போது வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு தனது மகனுக்கு திமுகவில் சீட்டு  வாங்கியது, வேலூர் திமுக விசுவாசிகளுக்கும், அதிக அளிவில் வாழும் சிறுபான்மை மக்களுக்கும் எரிச்சலை ஈட்டியது. மேலும் எப்போதும் திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ஒதுக்கப்படும் இந்த முறை லீக்கிற்கு சீட் கிடைக்கவில்லை. அதே போல் திமுகவின் முன்னாள் எம்.பி. முகமது சகி தனது மகனுக்கு சீட் கேட்டார் தலைமை கொடுக்குவில்லை. இது போன்ற பல சம்பவங்கள் திமுக மீது, முக்கியமாக துரைமுருகனின் மகனை எப்படியாகிலும தோற்கடிக்க வேண்டும் என்ற தீராத எண்ணம் வேலூர் திமுகவினருக்கு வேர் விட்டது.

மேலும் காட்பாடியில் உள்ள தனது கட்சிக்காரர்கள் மூலமாகவே தனது சதுரங்க வேட்டையை துரை ஆடினார். ஆனால் அவரின் கட்சிக்காரர்களே துரை குடும்பத்திற்கு ஒரு முடிவு கட்டுவோம் என்று கூடவே இருந்து போட்டு கொடுத்தது தான் இந்த வருமான வரித்துறை ரெய்டு சம்பவம் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

வேலூர் ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் ராமன் இவர் அதிமுகவி சுவாசி இவரை மாற்ற உடன் பிறப்புக்கள் உசுப்பி விட அதை துரை ஸ்டாலினிடம் கூற, உடனே வேலூர், தருமபுரி சேலம், நாமக்கல் ஆட்சியர்கள் ஒரு தலைபட்சமாக செயல்படுகின்றனர் அவர்களை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தனர்.

இதனால் சந்தர்ப்பம் எதிர்பார்த்து இருந்த வேலூர் ஆட்சியர் ராமன் துரைமுருகன் செயல்பாட்டை கண்காணிக்க உத்தரவிட்டார். அனைத்து தகவல் பெறப்பட்டு தேர்தல் ஆணையம் வருமான வரித்துறைக்கு தகவல் அளித்தார், அதன் படி நடந்தது தான் இந்த ரெய்டு. துரைமுருகன் வீடு, கல்வி நிறுவனங்கள் அவரின் பினாமியான செக் குமேடு தேவராஜ், அலங்காநல்லூர் சக்கரவர்த்தி, வஞ்சூர் பெருமாள், உதவியாளர் அஸ்ரப் அலி, பூஞ்சோலை சீனிவாசன் சிமெண்ட் குடோன். சுகுமார் வீடு, விஜயா வீடு மற்றும் 30 இடங்களில் ரூ 100 கோடிக்கும் மேலான புத்தம் புதிய 2000 , 500, 200 ரூபாய் நோட்டுக்கள் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன. தனது தெனாவட்டு பேச்சால் பேசி மாட்டிக் கொண்ட துரைமுருகனின் கனவு (தனது மகன் கதிர் ஆனந்தை எம்.பி. ஆக்குவது) கலையும் நிலைக்கு வந்து விட்டது. உடன்பிறப்புக்கள் கூடவே இருந்து துரைமுருகனுக்கு பெரிய ஆப்பாக வைத்துவிட்டனர்.

துரை முருகனின் கனவு பலிக்குமா?? அல்லது கனவாகவே இருந்து விடுமா??  இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!