100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மதுரை வக்ஃபு கல்லூரி மாணவ, மாணவிகள் நடத்திய மனித சங்கிலி பேரணி…

நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, மதுரை கே.கே. நகர் வக்பு வாரியக் கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணியில் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான, நடராஜன் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர்  விசாகன், வக்பு வாரிய கல்லூரி முதல்வர் அப்துல்காதர் உடன் உள்ளனர்.