இராமநாதபுரத்தில் ஜனநாயக திருவிழா எனும் வாக்காளர் விழிப்புணர்வு..

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு எட்டும் நோக்கில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜனநாயக திருவிழா எனும் வாக்காளர் விழிப்புணர்வு  நடைபெற்றது.

இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர் மூலம் அவர்தம் பெற்றோர்களிடத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெற்றோர்களிடமிருந்து கையொப்பம் பெற்று வருவதற்கான வாக்காளர் உறுதிமொழி பத்திரங்களை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வழங்கினார்.

கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரி வளாகத்தில் முதன் முறை வாக்காளர்கள் தேர்தல் பணிகளில் தங்களை ஆர்வமுடன்  ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் என்ற வாசக வடிவில் அணிவகுத்து நின்று விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டனர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலக விளம்பர வாகனம் மூலம் திரையிடப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்களை முதன் முறை வாக்காளர்களாகிய கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.கல்லூரி வளாகத்தில் 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம். நேர்மையாக, சுதந்திரமாக வாக்களிப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தி 60 அடி நீள விழிப்புணர்வு ரங்கோலியை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாணவ, மாணவியர்களுடன் பார்வையிட்டு வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டார். முதன் முறை வாக்காளர்களாகிய மாணவ, மாணவிகள் கல்லூரி ஆசிரியர்கள் கையெழுத்து இயக்கத்தில் கையொப்பமிட்டனர். மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமலினி, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், மாவட்ட கல்வி அலுவலர் பிரேம், சதக் கல்வி அறக்கட்டளை சேர்மன் முகமது யூசுப், சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் அப்பாஸ் முகைதீன், கீழக்கரை வட்டாட்சியர்  பபிதா சிக்கந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.