தமிழகத்திற்கு மோடி பாரபட்சம் மனிதநேய மக்கள் கட்சி நிறுவனர் குற்றச்சாட்டு..

இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் திமுக.. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நவாஸ் கனி போட்டியிடுகிறார் நவாஸ் கனிக்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி நிறுவனர் ஜவாஹிருல்லா பரமக்குடியில் நேற்று பிரசாரம் செய்தார். ராமேஸ்வரத்தில் ஆதரவு தெரிவித்து முக்கிய பிரமுகர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை இன்று சந்தித்து ஆதரவு கோரினார். ஜவாஹிருல்லா கூறுகையில், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழகமெங்கும் ஆதரவு உள்ளது.

நரேந்திர மோடியின் பாஜக தலைமையிலான ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக பலதரப்பட்ட மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதை வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இராமநாதபுரத்தில் 2014ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது நான் குஜராத்தில் இருந்து வந்து உள்ளேன் மீனவர்கள் படக்கூடிய துயரங்கள் அனைத்தும் நன்றாக தெரியும் அவற்றையெல்லாம் தீர்த்து வைப்பேன் என தெரிவித்தார் மேலும் மீனவர்கள் பிரச்னை தொடர்பாக தனி அமைச்சகம் அமைக்கப்படும் என தெரிவித்து சென்றார் .ஆனால் இதுவரை எந்த விதமான வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

இராமேஸ்வரத்தை சேர்ந்த ப்ரிட்ஜோ என்ற மீனவர் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் மோடி தலைமையிலான அரசு எடுக்கவில்லை. மக்களின் காவலாளி என சொல்லும் மோடி, அரசு எதையுமே செய்யவில்லை. மாறாக குஜராத் மீனவர்கள் பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்ட போது மிகப் பெரிய பிரச்னையாக எடுத்துக் கொண்டார். ஆனால் தமிழகத்திற்கு மோடி வஞ்சனை செய்து உள்ளார் பிஜேபி அரசு மக்களுக்கு வஞ்சனை செய்து உள்ளது என்பதை மக்களே உணர்ந்ததால் திமுக தலைவர் ஸ்டாலின் சொற்பொழிவு மற்றும் பொதுக் கூட்டங்களில் மக்கள் கூட்டங்கள் பெருகி வருகின்றனர். இதுவே வெற்று காவலாளி மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய காலம் வந்துவிட்டது.

தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 18 சட்டமன்றத் தொகுதிகளும் திமுக கூட்டணி மிக சிறப்பான வெற்றியைப் பெறும். தோல்வி பயத்தில் பாஜகவினர் தமிழகத்தில் பல்வேறு அராஜகங்களில் ஈடுபட்டு வருகின்றனர், அதில் ஒன்று தான் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவர் உறவினர்கள் வீட்டுகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது இது வன்மையாக கண்டிக்க தக்கது இது பாரபட்சமான நடவடிக்கை என தெரிவித்தார்.