Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரம் அமைச்சர் கோஷத்துடன் நிறைவு

இராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரம் அமைச்சர் கோஷத்துடன் நிறைவு

by ஆசிரியர்

இராமநாதபுரம்,  நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் பிரசாரம்  மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் நயினார் நாகேந்திரன் (பாஜக), நவாஸ் கனி (முஸ்லிம் லீக்), பஞ்சாட்சரம் (பகுஜன் சமாஜ்), வ து ந ஆனந்த் (அமமுக), விஜய பாஸ்கர் (மக்கள் நீதி மையம்), புவனேஸ்வரி (நாம் தமிழர் ) உள்பட 23 பேர் களத்தில் உள்ளனர். நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் இவர்கள் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக பிரசாரம் மேற்கொண்டனர்.

கடைசி நாளான நேற்று பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ராமநாதபுரம் நகரின் அனைத்து பகுதிகளிலும் வாக்கு சேகரித்தார். வேட்பாளருடன் அமைச்சர் மணிகண்டன், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அன்வர் ராஜா, மாநில பாஜ., துணை தலைவர் குப்பு ராமு, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன், பாஜ மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட செயலர் ஆத்ம கார்த்தி உள்பட கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர். பாஜக., பிரசாரம் அரண்மனை முன் தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தொண்டர்கள் கோஷத்துடன் நிறைவடைந்தது.

முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, அபுபக்கர் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன்ம, முன்னாள் எம்பி., பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ முருகவேல், திமுக முன்னாள் மாவட்ட செயலர் திவாகரன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர். திமுக கூட்டணி கட்சிகளின் பிரசாரம் சிவன் கோயில் பகுதி முன் நிறைவடைந்தது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!