எக்குடி கிராமத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது..

கீழக்கரை வட்டம் எக்குடி கிராமத்தில் நில வேம்பு கசாயம் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் எக்குடி ஜமாத் தலைவர் அப்துல்காதர் மற்றும் செயலாளர்கள் அஸ்கர் அலி, சிராஜுதீன், சாதிக், ஊராட்சி செய்லர் சண்முக வேலு, உத்திரகோசமங்கை அரசு ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரி, வட்டார மருத்துவ அலுவலர் ராசிக்தீன், சித்த மருத்துவ அதிகாரி முத்துராமன், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் லிங்கம், சுகாதார ஆய்வாளர் விஜயகுமார், பணிகள் பொறுப்பாளர் விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக டெங்கு ஒழிப்பு உறுதிமொழியும் கலந்து கொண்ட மாணவர்கள், அதிகாரிகள் மற்றும் அனைவராலும் மேற்கொள்ளப்பட்டது.