Home செய்திகள் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி தமிழாய்வுத் துறையில் மகாகவி பாரதியாரின் 140ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி நடைபெற்றன.

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி தமிழாய்வுத் துறையில் மகாகவி பாரதியாரின் 140ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி நடைபெற்றன.

by mohan

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி தமிழாய்வுத் துறையில்மகாகவி பாரதியாரின் 140ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் மாணவர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். திருச்சி தேசியக் கல்லூரி தமிழாய்வுத் துறைப் பேராசிரியர் முனைவர் இரா. பத்மா அவர்கள் நடுவராக பொறுப்பேற்று வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்து சிறப்புரை வழங்கினார். மதியம் 2 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் தமிழாய்வுத் துறைப் பொறுப்பாளர் முனைவர் சி. பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.ரா. பொன் பெரியசாமி அவர்கள் தலைமை உரையாற்றினார். தலைமை உரையில்காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டுமாலை முழுதும் விளையாட்டு-என்றுவழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பாஎன்ற பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் எடுத்துரைத்தார்.கல்லூரி தலைவர் திரு .பொன். பாலசுப்பிரமணியன் அவர்கள் தமிழாய்ந்த தலைவர்களின் பிறந்த நாளில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்துவதன் மூலம் மாணவர்களின் தனித்திறனை அறிய முடியும் என வாழ்த்துரை வழங்கினார். மேலும் நிகழ்வில் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சி சுந்தரம்கல்லூரி தலைவர் அவர்களின் தவப் புதல்வர் பா. சூரியா அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். தமிழாய்வுத் துறை பேராசிரியர் அ. சசிகலாதேவி நன்றியுரை கூறினார். தமிழாய்வுத் துறை மாணவர்கள் செ.கன்னிகா ரெ. சௌந்தர்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com