Home செய்திகள் பிற மாநிலத்தவரும் கன்னடம் கற்க வேண்டும், எடியூரப்பா அதிரடி.!

பிற மாநிலத்தவரும் கன்னடம் கற்க வேண்டும், எடியூரப்பா அதிரடி.!

by Askar

கர்நாடக மாநிலம் உருவானதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொறு ஆண்டும் நவம்பர் 1 ஆம் தேதி “ராஜ்யோத்சவா” கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நேற்று பெங்களூரில் நடைபெற்ற ராஜ்யோத்சவா விழாவில் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கலந்துகொண்டார்.அதில் அவர், “கன்னட மொழி, அழகான, வளமிக்க, நவீனத்தை உள்வாங்க கூடிய மொழி. ஆதலால் கன்னட மொழியை பயன்படுத்துவதில் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை” என கூறியுள்ளார்.மேலும் அவர், “வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகத்தில் குடிவந்தவர்கள் அனைவரும் கன்னட மொழியை கற்க வேண்டும், கர்நாடகாவின் கலாச்சாரத்தை, வாழ்க்கைமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.1956-ல் மொழி வாரியாக பல மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது, மைசூர் மாநிலமாக இருந்தவற்றுடன் சில கன்னட மக்கள் வாழும் சில பகுதிகளை சேர்த்து கர்நாடகா மாநிலம் உருவாக்கப்பட்டது வரலாறு.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!