![IMG-20170215-WA0093[1]](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2017/02/IMG-20170215-WA00931.jpg?resize=678%2C381&ssl=1)
கீழக்கரை சின்னக்கடை தெருவில் இருந்து கோக்கா அஹமது தெரு செல்லும் சாலையில், ஒரு வீட்டின் மீது சாய்ந்தவாறு எந்நேரத்திலும் முறிந்து விழும் நிலையில் நிற்கும் ஆபத்தான மின் கம்பத்தினால் இந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இது குறித்து சட்டப் போராளி நசீர்கான் கூறும் போது ”போக்குவரத்து மிகுந்த இந்த சாலை வழியாக தான் பள்ளிகளுக்கு செல்லும் சிறார்களும், மாணவ, மாணவிகளும் தினமும் கடந்து செல்கின்றனர். மிக ஆபத்தான சூழலில் நிற்கும் இந்த மின் கம்பத்தை மாற்றிட கோரி பல முறை சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் பால்ராஜிடம் முறையிட்டு விட்டோம். ஆனால் அவர் மெத்தனப் போக்கில் இருக்கிறார். இந்த அபாய மின் கம்பத்தால் ஏதேனும் உயிர் பலி அபாயம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.” என்று தன் வருத்தத்தை பதிவு செய்தார்.
கீழக்கரையில் பல இடங்களில் இது போன்ற அவலங்களை காண முடியும். உதாரணமாக வடக்கு தெரு தைக்காவில் இருந்து மணல்மேடு செல்லும் மதிக்கடைக்கு முன்னால் பழைய கேபிள் டிவி (PKS CABLE) இருந்த சந்துக்கு நுழையும் வாயில் மின் கம்பம் விழாமல் கயிற்றை வைத்து கட்டியும், வயர்கள் தலையில் உரசும் அபாயத்தில் உள்ளதையும் காணலாம்