Home செய்திகள் புளியங்குடி பகுதியில் மின்வாரிய பாதுகாப்பு வகுப்பு; மின்வாரிய அலுவலர்கள் பணியாளர்கள் பங்கேற்பு..

புளியங்குடி பகுதியில் மின்வாரிய பாதுகாப்பு வகுப்பு; மின்வாரிய அலுவலர்கள் பணியாளர்கள் பங்கேற்பு..

by mohan
புளியங்குடி பகுதியில் மின்வாரிய பணியாளர்களுக்கான பாதுகாப்பு வகுப்பு நடந்தது. இவ்வகுப்பில் மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கோட்டத்தில், திருநெல்வேலி மண்டல தலைமை மின் பொறியாளர் டேவிட் ஜெபசிங் மற்றும் திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவின் படி பேரிடர் காலங்கள் மற்றும் வினியோகத்தில் களப்பணிகள் மேற்கொள்ளும் போது பாதுகாப்புடன் பணிபுரிவது பற்றிய பாதுகாப்பு வகுப்பு புளியங்குடி தனியார் மண்டபத்தில் நவ.28 அன்று நடைபெற்றது. இதில் புளியங்குடி உப கோட்டத்திற்கு உட்பட்ட புளியங்குடி டவுண் பிரிவு, புளியங்குடி கிராமப்புறம் பிரிவு, புளியங்குடி தெற்கு பிரிவு, புளியங்குடி வடக்கு பிரிவு, முள்ளிக்குளம் பிரிவு, வீரசிகாமணி உள்ளிட்ட பிரிவுகளில் பணிபுரியும் பிரிவு அலுவலர்கள், மற்றும் பணியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த பாதுகாப்பு வகுப்பில் விநியோகத்தில் பாதுகாப்புடன் பணிபுரிவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விநியோகத்தில் பணி புரியும் போது பாதுகாப்புக்காக உபயோகப்படுத்த வேண்டிய நில இணை பம்ப், (EARTH ROD) பாக்கி, (BELTROPE), (GLOVES) ஆகிய பாதுகாப்பு சாதனங்களின் செயல்பாடுகள் மற்றும் தன்மைகள் பற்றி ஒலி ஒளி காட்சியுடன் திருநெல்வேலி மண்டல பாதுகாப்பு அதிகாரி உதவி செயற்பொறியாளர் செந்தில் ஆறுமுகம் செயல்முறையில் விளக்கி கூறினார். மேலும் வருகிற 01.12.2023 முதல் விநியோகத்தில் பணி புரியும் போது பாதுகாப்பு செயலி (TNEB SAFTY APP) மூலம் உறுதி செய்யப்பட்ட பின்பு பணிகள் மேற்கொள்வதற்கு பாதுகாப்பு செயலியின் எளிய வழிகாட்டுதல் முறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். அப்போது பணியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு வகுப்பில் புளியங்குடி உபகோட்ட பிரிவில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர், பிரிவு மின் பொறியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு பாதுகாப்புடன் பணிபுரிவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த பாதுகாப்பு வகுப்பினை திருநெல்வேலி தொழில்நுட்ப பயிற்சி மேம்பாட்டு மைய உதவி மின் பொறியாளர் முருகன், சிறப்பு நிலை முகவர் இராமசுப்பு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!