
மதுரை ஜெயந்திபுரம் ராமையா தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் இவரது மகன் சஞ்சீவ் குமார் வயது 18, இவர் தாய் இல்லாத காரணத்தினால் பாட்டியின் கண்காணிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
இவர் திருப்பரங்குன்றம் பகுதியில் மூலக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று (14/02/2021) விடுமுறை என்பதால், மாலை 4 மணி அளவில் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றுள்ளார்கள். இவருக்கு நீச்சல் தெரியாத காரணத்தால் கிணற்றினுள் இறங்கி ஒரு ஓரமாக கம்பியை பிடித்தபடியே குளித்துள்ளார், ஆனால் கைப்பிடியில் கை நழுவி கிணற்றினுள் இழுத்துச் செல்லப்பட்டு கிணற்றுக்குள் மூழ்கியுள்ளார். இவர்கள் நண்பர்கள் சஞ்சீவ் குமாரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் எனினும் அவர்களால் மீட்க முடியவில்லை.
உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சஞ்சீவ் குமாரின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மதுரை மாவட்ட ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.