பெரிய பட்டிணத்தில் திமுக சார்பில் ரேஷன் கடை முற்றுகை ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் ரேஷன் கடைகளில், கடந்த சில மாதங்களாக பருப்பு, பாமாயில் உள்ளிட்டவை சரி வர வினியோகிக்கவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ளது. சர்க்கரை மட்டும் வழங்குவதால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் இன்று 13.03.17 ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தில் உள்ள இரன்டு ரேசன் கடைகள் முன்பாகவும் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.கவின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிங்கம் பசீர் ஆலோசனையின் பேரில் தி.மு.க பிரமுகர்கள் மஜீத், அபிபுல்லா, சதக் உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான கட்சி தொண்டர்கள் திரண்டு ரேசன் கடை ஊழலுக்கெதிராகவும், உடனடியாக அத்தியாவசிய பொருள்களை வழங்க கோரியும் கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..