Home செய்திகள் கீழக்கரையில் திமுக கட்சியினர் மறியல் போராட்டம் ..

கீழக்கரையில் திமுக கட்சியினர் மறியல் போராட்டம் ..

by ஆசிரியர்
தமிழிகத்தில் அரசு அறிவித்துள்ள சேலம் 8 வழி பாதையை எதிர்த்து பல் வேறு பகுதிகளில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சி சார்பாக மறியல் மற்றும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து  கீழக்கரையிலும் சாலை மறியல் மற்றும் போராட்டம் நடைபெற்றது.
       
கீழக்கரையில் நகர் செயலாளர் SAH.பசீர் தலைமையில், வடக்குத் தெரு அலுவலகத்தில் இருந்து அவருடைய தலைமையில் தொடங்கி நடு ரோட்டில் அமர்ந்து மறியல் செய்து கோசமிட்டதால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து கீழக்கரை பேருந்து நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.
புகைப்படம் மூலம்:- மக்கள் டீம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com