பாலக்கோடு அடுத்த வெளிச்சந்தையில் திமுக கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம்..

பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை தனியார் மண்டபத்தில் திமுக கட்சியின் தருமபுரி தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்து வெளிச் சந்தை தனியார் மண்டபத்தில் திமுக கட்சியின் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது.

திமுக கட்சியின் மாவட்ட செயலாளர்  தடங்கம்சுப்பிரமணி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது மற்றும் திமுக கட்சியின் இன்பசேகரன் தாமரைச்செல்வன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் கூட்டணி கட்சியின் மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டு தர்மபுரி திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் அவருக்கு ஒன்றிணைந்து வெற்றிபெறச் செய்வோம் என்று பேசினார்கள்.  கட்சியின் உறுப்பினர்கள் 500க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.