Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ராமநாதபுரம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி அறிமுக கூட்டம்…

ராமநாதபுரம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி அறிமுக கூட்டம்…

by ஆசிரியர்

இராமநாதபுரம், அக்,11- ராமநாதபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு அறிமுக கூட்டம்  சார்பில் காணொலி காட்சி மூலம் நடந்தது. மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலர் விஜயகதிரவன் தலைமை வகித்தார்.

மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கி ணைப்பாளர் பகத்சிங், மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக செயலர் பிரவீன் முன்னிலை வகித்தனர். மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலரும், அமைச்சருமான டிஆர்பி ராஜா நிர்வாகிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார்.மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராதிகா பிரபு, ராமநாதபுரம் தொகுதி ஒருங்கி ணைப்பாளர் சதீஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பா ளர்கள் நரேஷ், வசந்தகுமார், அக்பர்,  ராமநாதபுரம், கீழக்கரை நகர் ஒருங்கிணைப்பாளர்கள் அபுல் ஹசன், புரூக்கான், மண்டபம் மத்திய ஒன்றிய  ஒருங்கிணைப்பாளர் உதயா, ராமநாதபுரம் தெற்கு நகர் ஒருங்கிணைப்பாளர் சிவா, மண்டபம் பேரூர் ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி திருவாடானை மத்திய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முத்தழகன் மருது உள்பட பலர் பங்கேற்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com