Home செய்திகள்உலக செய்திகள் இராஜபாளையம் திமுக இளைஞர் அணி சார்பில் இரத்த தானம்..

இராஜபாளையம் திமுக இளைஞர் அணி சார்பில் இரத்த தானம்..

by Abubakker Sithik

முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இராஜபாளையத்தில் திமுக இளைஞர் அணியினர் இரத்த தானம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திமுகவினர் ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி, சேலை, அன்னதானம் வழங்குதல், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல், மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல் என பல்வேறு வகைகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ராஜபாளையம் நகர திமுக இளைஞர் அணி சார்பில், தமிழக முதல்வர் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு 71 இளைஞர்கள் ஒன்றிணைந்து அரசு மகப்பேறு மருத்துவமனையில் பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார், சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் ஆகியோர் தலைமையில் ரத்த தானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாசறை ஆனந்த், நகர்மன்ற உறுப்பினர் அருள் உதயா மற்றும் ராம்நாத் வடக்கு மற்றும் தெற்கு நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா உட்பட திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com