ஆண்டிப்பட்டி தாலுகாவில் தனக்கு தானே மொட்டையடித்து அஞ்சலி செலுத்திய திமுக தொண்டர் – வீடியோ பதிவு..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா பாலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் தலைவர் கலைஞர் நன்றி கடன் செலுத்தும் விதமாக தனுக்கு தானே யாருடைய உதவி இல்லாமல் மொட்டை அடித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

இவர் ஆண்டிபட்டியில் கொய்யா வியாபாரம் செய்து வருகிறார். சிறுவயது முதலே தி.மு.க கொள்கையால் ஈர்க்கபட்டு தி.மு.கவில் இணைந்தார். தி.மு.கவில் கட்சி உறுப்பினராக உள்ளார். தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டும் என்று பல்வேறு கோவில்களுக்கு சென்று பிராத்தனை செய்து வந்தார். தனது பெயரனுக்கு கௌதம் ஸ்டாலின், என தி.மு.க கட்சியினர் பெயரை வைத்து மகிழ்ந்தவர். தனது பேரனுக்கு தலைவர் ஸ்டாலின் பெயர் சூட்ட வேண்டும் என ஒற்றக்காலில் ஆண்டிபட்டி ஒன்றிய திமுக கழக நிர்வாகிளிடம் போராடினார். தலைவர் மீது அளவில்லாத பற்று கொண்டவராக இவர் திகழ்ந்தார்.

இதன் விளைவாக தனது தலைவனுக்கு தானே யாருடைய உதவி இல்லாமல் மொட்டை அடித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.