இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டாரப் போக்குவரத்துத்துறையின் மூலம் சாலைப்பாதுகாப்பு மாத விழாவிற்கான விழிப்புணர்வு பேரணி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்திஷ் முன்னிலையில் சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவங்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழகத்தில் சாலைப்பாதுகாப்பு விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15.01.2024 முதல் 14.02.2024 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. சாலைப்பாதுகாப்பின் அவசியத்தை பொதுமக்களிடையே உணர்த்திடும் வகையில் விபத்தில்லா சாலை பயணம் அமைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் தமிழக அரசு பல்வேறு சாலைப்பாதுகாப்பு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் வானொலி பண்பலை சேவைகளின் மூலம் நாள்தோறும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சாலைப்பாதுகாப்பு குறித்து கைபேசி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சாலை பயணத்தின் போது விலையில்லா மனித உயிர்களை காப்பாற்ற தமிழக அரசு 108 அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக விபத்துகள் ஏற்படும் இடங்களுக்கு விரைவாக சென்று சேவை புரிவதால் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் சாலைகளில் நடக்கும் போக்குவரத்து விதி மீறல்களை கண்டறிய சிறப்பு தணிக்கைகள், காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் முதலமைச்சரின் “இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48” என்ற சீர்மிகு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதோடு பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்ற வகையில் சாலை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உடனடி விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றன. இந்த சாலைப்பாதுகாப்பு மாதத்தில் அரசானது வாகனத்தை இயக்கி வரும் ஓட்டுநர்களுக்கு சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாதசாரிகள் உரிய இடங்களில் உள்ளசாலைகயை கடப்பதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழ்நாடுமுழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உயிர் வாழ்வதற்கான மற்ற அடிப்படை திறன்களைப் போல சாலைப்பாதுகாப்பு கல்வியும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்படுவோம் என மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். இப்பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மூலம் பொதுமக்கள் பார்த்து பயன் பெற்றிடும் வகையில் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஷேக் முகம்மது , வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் செந்தில் குமார் , பத்ம பிரியா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.
.
You must be logged in to post a comment.