Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை சட்ட விழிப்புணர்வு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு !

கீழக்கரை சட்ட விழிப்புணர்வு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு !

by Baker BAker

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் “உங்களை தேடி, உங்கள் ஊரில்,” என்னும் புதிய திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கீழக்கரை சட்ட விழிப்புணர்வு சார்பில் நகர் செயலாளர் தாஜுல் அமீன் மனு வழங்கினார். அதில் கூறியதாவது கீழக்கரையில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் இருக்கின்றன கீழக்கரை தாலுகாவில் 10க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் இருக்கின்றன தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் வகையில், தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான காப்பீட்டு திட்ட அட்டைகள் முறையாக கிடைக்கப்பெறாமல், கீழக்கரை தாலுகா பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கீழக்கரை தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள், விதவைகள், ஆதரவற்றவர்கள், மூத்த குடிமக்கள் உளியிட்டோர் இந்த மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையை பெறுவதற்காக 20 கிலோ மீட்டர் தூரம் பயணித்து இராமாநாதபுரம் வரை சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகே இந்த காப்பீட்டு திட்ட அட்டையை பெற வேண்டிய நிலை உள்ளது கீழக்கரை தாலுகாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் இந்த காப்பீட்டு திட்ட அட்டை கிடைக்காமல் அல்லல்பட்டு பெரும் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் இது நாள் வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஆகவே மாவட்ட ஆட்சியர் கீழக்கரை தாலுகாவில், அனைத்து அலுவலக வேலை நாள்களிலும் செயல்படும் வகையில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையை பெறுவதற்கான நிரந்தர முகாம் அலுவலகத்தினை திறக்குமாறும், அதெற்கென உரிய பயிற்சி பெற்ற அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு மாவட்ட கோட்டாட்சியர் கோபு கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி கீழக்கரை நகராட்சி ஆணையர் செல்வராஜ் சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா உட்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com