Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை வட்டத்தில் உங்களை தேடி, உங்கள் ஊரில்,” என்னும் திட்டத்தின் கீழ் ஆய்வு !

கீழக்கரை வட்டத்தில் உங்களை தேடி, உங்கள் ஊரில்,” என்னும் திட்டத்தின் கீழ் ஆய்வு !

by Baker BAker

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் “உங்களை தேடி, உங்கள் ஊரில்,” என்னும் புதிய திட்டத்தினை அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் திட்டத்தின் துவக்கமாக இன்று 31.01.2024 காலை 9:00 மணி முதல் 01.02.2024 காலை 9:00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் முகாமிட்டு அரசு துறை அலுவலகங்கள் ஆய்வு செய்தல் மற்றும் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திற்கு சென்று வேளாண் விரிவாக்க மையத்தின் இணையதளத்தில் உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்து பயன்பெற்ற விவசாயிகளின் தொலைபேசி எண்ணில் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடர்பு கொண்டு அரசின் திட்டங்கள் குறித்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். அதன் அடிப்படையில் நலத்திட்டம் வேண்டி விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பொருட்களை வழங்கிட வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, திருப்புல்லாணியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந்தைகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்கி வரும் விபரம் குறித்து கேட்டறிந்ததுடன், உணவுப் பொருள்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று பதிவேடுகளை பார்வையிட்டதுடன் அருகாமையில் உள்ள பயன்பாடற்ற பழைய கட்டடத்தை அப்புறப்படுத்த வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து திருப்புல்லாணி காவல் நிலையத்திற்குச் சென்று காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப் பட்டுள்ளதை பார்வை யிட்டத்துடன், பதிவேடுகளையும் பார்வையிட்டார். பின்னர் மேலப்புதுகுடி ஊராட்சியில் உள்ள நலவாழ்வு மையத்தை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து சிறுகோயில் கிராமத்தில் மக்களைத்தேடி மருத்துவம் மூலம் பயன்பெற்றுவரும் பயனாளிகளை சந்தித்து மாதந்தோறும் தேவையான மருந்து, மாத்திரைகள் கிடைக்கப்பெறுகிறதா என கேட்டறிந்தார். பின்னர் தில்லையேந்தல் ஊராட்சி மற்றும் இதம்பாடல் ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்பகுதியில் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் போதியளவு குடிநீர் கிடைத்திட வேண்டுமென தெரிவித்தார்கள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து தேவையான அளவு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.நான் துண்டு கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த ஆய்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனுஷ்கோடி ,கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், சமூகப்பாதுகாப்பு திட்டதனித்துணை ஆட்சியர் மாரிச்செல்வி , கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார், திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் இராஜேஸ்வரி மற்றும் அரசுஅலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com