திண்டுக்கல்லில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்குவதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் முகாம்..

18 வயதுக்கு குறைவான வயதுடைய உதவித்தொகை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கை கால் ஊனமுற்ற, காது கேளாத வாய் பேச முடியாத, கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளில் பதினெட்டு வயதுக்கு குறைவாக இருந்து இன்னும் மாதாந்திர உதவித்தொகை பெறாத மாற்றுத் திறனாளிகளுக்கு வயது தளர்வு செய்து உதவித்தொகை வழங்குவதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகிற 22.10.18 அன்று காலை 10.00 மணிக்கு திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இம்முகாமில் இதுவரை 18 வயதுக்கு கீழ் இருந்து மேற்கண்ட ஊனம் உடைய மாற்றுத்திறனாளிகளில் உதவித்தொகை பெறாத யாராக இருந்தாலும் அவர்களது ஆதார் கார்டு, ரேசன் கார்டு, ஊனமுற்றோர் புத்தகம், வங்கிப்புத்தகம் ஆகியவற்றின் நகல்களோடு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டையும் எடுத்துக்கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். இம்முகாமிற்கு கண்டிப்பாக மேற்கண்ட ஊனம் உடையவர்கள் மட்டும் செல்லவும்.

மன வளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் கை கால் ஊனமுற்றவர்களில் 75 சதவீதத்துக்கு மேல் உள்ளவர்கள் செல்ல வேண்டாம். இந்த வாய்ப்பை அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு மாவட்ட தலைவர் P.செல்வநாயகம் மற்றும் மாவட்ட செயலாளர் S.பகத்சிங்  ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

செய்தியாளர்:- அபுபக்கர் சித்திக்.