கீழை நியூஸ் மூலமாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த; திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ் பாபு.!

“கீழை நியூஸ்” மூலமாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த; திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர். சுரேஷ் பாபு.!

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர். சுரேஷ் பாபு அவர்களின் உடல் நிலையப் பற்றி சில தவறான தகவல்கள் பரவின. ஆகையால் இது சம்பந்தமாக “கீழை நியூஸ்” இணையதள நிர்வாக ஆசிரியரும் “சத்திய பாதை” முதன்மை ஆசிரியருமான ஜெ. அஸ்கர், டாக்டர் சுரேஷ் பாபு அவர்களை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது டாக்டர் சுரேஷ் பாபு கூறியதாவது, எனக்கு லேசான உடல் வலி மட்டுமே இருந்தது அதற்கான முறையான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறேன். தற்போது நலமாக உள்ளேன் ஆனால் என் மீதும் எனது செயல்பாடுகள் மீதும் பொறாமை கொண்ட சிலர் என் மீது தவறான தகவல்களை பரப்பி உள்ளனர்.அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளேன். மேலும் தற்போது அவர்கள் மறுப்பு செய்திகள் வெளியிட்டு உள்ளனர். இருந்த போதிலும் நான் நடவடிக்கைகள் மேற்கொள்வேன் மேலும் என் மீதும் எனது உடல் நலன் மீதும் அக்கறை கொண்டு என்னை தொடர்பு கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இரொன்டொறு நாட்களில் மீண்டும் பணிக்கு வந்து மக்கள் பணியாற்ற ஆவலாக உள்ளேன் என்று கூறினார். தங்களது மருத்துவ சேவை மக்களுக்கு தேவை என்று கீழை நியூஸ் சார்பாக மனமாற வாழ்த்தினோம்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..