
பல்வேறு வதந்திகளை முறியடித்து சிகிச்சை முடிந்து மிகுந்த நலமுடன் வீடு திரும்பினார் டாக்டர் சுரேஷ் பாபு!
திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ் பாபு லேசான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முறையான சிகிச்சையை மேற்கொண்டு சிகிச்சை முடிந்து தற்போது மிகுந்த ஆரோக்கியத்துடனும் உடல் நலத்துடனும் வீடு திரும்பினார்.டாக்டர் சுரேஷ் பாபு சிகிச்சையில் இருக்கும்போது சிலர் அவரது உடல் நிலையை பற்றி பல்வேறு வதந்திகளை பரப்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது வதந்திகளை முறியடித்து உடல் ஆரோக்கியத்துடன் (மீண்டு) மீண்டும் மக்கள் பணியாற்ற வருகை தந்த டாக்டர் சுரேஷ் பாபு அவர்களின் வருகை, அவரது கனிவான பேச்சுக்கும் எளிமையான அணுகுமுறையாலும் ஈர்க்கப்பட்ட பலரும் அவரிடம் சிகிச்சை பெற்று குணமடைந்த ஏராளமானோரும் சந்தோஷத்தையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து உள்ளனர்.
தொடரட்டும் தங்களது மருத்துவ சேவை!
வாழ்த்துக்களுடன்,
“கீழை நியூஸ்” குழுமம்
You must be logged in to post a comment.