Home செய்திகள் பழநி தைப்பூசத் திருவிழாவின் போது முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழநி தைப்பூசத் திருவிழாவின் போது முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

by Askar

தைப்பூசத் திருவிழாவின் போது முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் கடந்த 28 ம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற்று நிறைவடைந்தது. தைப்பூசத் திருவிழாவின் போது அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில் குறவர் இனத்தை சேர்ந்த வள்ளிக்கும்- முருகனுக்கும் திருமணம் நடைபெற்றதால் வள்ளியின் பிறந்தவீடான குறவர் இனமக்களின் சார்பில் தாய் வீட்டு சீதனம் வழங்கப்பட்டது.இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள குறவர் இனமக்கள் அனைவரும் இணைந்து பழனிமுருகனுக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு பழனி பேருந்து நிலையம் முதல் தேவர் சிலை ,சன்னதி வீதி ,அடிவாரம் வழியான மலைக்கோவலுக்கு சென்றனர். இதில் இளம் பெண்களுக்கு வள்ளி வேடம் இட்டும் ,சிறுவர்களுக்கு வேடம் இட்டும் பெண்கள் தேன், திணைமாவு,மா,பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்குகள், வில்-அம்பு, ஆகியவை சீர்வரிசையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ,அலகு குத்தியும் நேர்த்திகடனை செலுத்தியும் ,முருகனுக்கும் வள்ளிக்கும் சீதனமாக வழங்கப்பட்டது.சீர்வரிசை பொருட்களை பழனி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து முருகனை வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் குறவர் இனத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பழநி- ரியாஸ்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com