Home செய்திகள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமிய ஜமாத்தார்களுக்கு அழைப்பிதழ் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

கோவில் கும்பாபிஷேகத்திற்கு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமிய ஜமாத்தார்களுக்கு அழைப்பிதழ் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

by Askar

கோவில் கும்பாபிஷேகத்திற்கு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமிய ஜமாத்தார்களுக்கு அழைப்பிதழ் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கலை முத்தூர் ஸ்ரீ ஜகோர்ட் பத்ரகாளியம்மன் கோயிலில் வருகின்ற 15- 2 -2024 -ஆம் அன்று 12 வருடங்களுக்குப் பின்பு மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாவில் ஜல்லிக்கட்டு மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து தீச்சட்டி எடுத்தும் தீ குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக அழைப்பிதழை அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் சமூக நல்லிணக்கத்தோடு அங்குள்ள ஜமாத்தார்க்கு இஸ்லாமியர்களுக்கு வழங்கபட்டது. பழனி அருகே கோவில் கும்பாபிசேக விழாவிற்கு இஸ்லாமியர்களுக்கு அழைப்பிதழ் வழங்கிய சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பழநி -ரியாஸ்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com