Home செய்திகள் பாப்பம்பட்டியில் அரசுப் பள்ளியில் கண்ணை கவரும் ஓவியங்களுடன் புதிதாக கட்டித் தரப்பட்ட கட்டிடம். சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் திறந்து வைத்தார்.

பாப்பம்பட்டியில் அரசுப் பள்ளியில் கண்ணை கவரும் ஓவியங்களுடன் புதிதாக கட்டித் தரப்பட்ட கட்டிடம். சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் திறந்து வைத்தார்.

by Askar

பாப்பம்பட்டியில் அரசுப் பள்ளியில் கண்ணை கவரும் ஓவியங்களுடன் புதிதாக கட்டித் தரப்பட்ட கட்டிடம். சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம்
பழனி அருகே பபாப்பம்பட்டி கிராமத்தில்  செயல்பட்டு வருகிறது தமிழ் மற்றும் ஆங்கில வழி அரசு நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டித் தரக்கோரி ஆசிரியர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் தமிழக அரசு உத்தரவின் பேரில் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பள்ளி கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்களது புதிய வகுப்பறையை கண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர். தனியார் பள்ளிக்கு இணையாக தங்களது பள்ளியில் வகுப்பறை அமைந்ததை பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடத்தில் மாணவர்களுக்கு எளிதாக பாடத்தை கற்பிக்கும் வகையில் வண்ண வண்ண ஓவியங்கள், உயிர் எழுத்துக்களை படங்களாகவும், மெய்யெழுத்துக்களையும், சூரிய குடும்பம், தேசிய சின்னங்கள் போன்றவர்களை பல்வேறு வண்ணங்களில் படங்களாக சுவர்களில் வரைந்து உள்ளனர். பாட புத்தகங்களில் உள்ள பாடங்கள் சுவர்களில் ஓவியமாக வரைந்து மாணவர்கள் மனதில் பதியும்படியாக அமைத்துள்ளனர். பள்ளிக்கட்டத்தை திறந்து வைத்து பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சுவர் ஓவியங்களை பார்வையிட்டார்.

பழநி- ரியாஸ் 

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!