Home செய்திகள் பாலக்கோடு அருகே ஜெர்தலாவ் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட நான்கு வீடுகளை பொதுப்பணித்துறையினர் JCB மூலம் அகற்றினர்..

பாலக்கோடு அருகே ஜெர்தலாவ் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட நான்கு வீடுகளை பொதுப்பணித்துறையினர் JCB மூலம் அகற்றினர்..

by Askar

பாலக்கோடு அருகே ஜெர்தலாவ் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட நான்கு வீடுகளை பொதுப்பணித்துறையினர் JCB மூலம் அகற்றினர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட ஜெர்தலாவ் ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது இந்த ஏரியானது 300 ஏக்கர் பரப்பளவில் உள்ளது இந்த ஏரி 5 ஆயிரம் ஏக்கர் விவாசய நிலத்திற்க்கு பாசன வசதியை அளிக்கிறது.

இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் இடது கால் வாய் வழியாக தும்பலபள்ளி அணைக்கும், வலது கால்வாயிலிருந்து  வெளியேறும் நீர் தர்மபுரி சனத்குமார் நதி வரை சென்றடைகின்றது இப்பகுதி விவசாயிகளுக்கு பிரதான நீர் ஆதரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது இந்த ஏரியில் சில சமூகவிரோதிகள் ஆங்காங்கே கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்து வந்தனர் சமீபகாலமாக கொட்டகையை அகற்றிவிட்டு கட்டிடம் கட்டியுள்ளனர்.

இதுகுறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் பொதுப்பணித் துறைக்கு தகவல் தெரிவித்தனர் அதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கட்டிய வீடுகளை அகற்றுமாறு பலமுறை வலியுறுத்தியும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் இன்று பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சாம்ராஜ் , வட்டாட்சியர் ராஜா, காவல்ஆய்வாளர் விஸ்வநாதன் ஆகியோருடன் சென்று ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர்.

அப்போது அவருக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது அதனை தொடர்ந்து போலிஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இரண்டு வீடுகள் ஒரு மாட்டுக் கொட்டகை ஒரு மீன் கொட்டகை  என நான்கு கட்டிடங்களை அகற்றினர் மேலும்  பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சாம்ராஜ் கூறியதாவது ஏரிகள் ஆற்று கால்வாய் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கொட்டகை அமைப்பது வீடு கட்டுவது ,குடில் அமைத்து குடியேறுவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர் கடுமையாக தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!