Home செய்திகள் பாலக்கோடு அருகே சோமனஅள்ளி கிராமத்தில் அரசு மதுபானக் கடையை திறக்க பெண்கள்எதிர்ப்பால் பரபரப்பு -போலிசார் குவிப்பு..

பாலக்கோடு அருகே சோமனஅள்ளி கிராமத்தில் அரசு மதுபானக் கடையை திறக்க பெண்கள்எதிர்ப்பால் பரபரப்பு -போலிசார் குவிப்பு..

by Askar

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சோமன அள்ளி பகுதியிலுள்ள  அரசு மதுபான கடை நாளை திறக்க இருந்த நிலையில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என 50க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடை திறந்தால் வெளியூர் பகுதியில் இருந்து ஏராளமானோர் மது அருந்த வருவார்கள் அதிகமான வாகன போக்குவரத்து ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது மேலும் டாஸ்மாக் கடை அருகே  அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருவதால்  பள்ளியில் படிக்கும் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது பெண்கள் தனியாக வெளியே சென்று வர முடியாத சூழல் உருவாகியுள்ளது  தற்போது கொரோனோ வைரஸ் தொற்று  உள்ள சூழ்நிலையில் இப்பகுதியில் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது மேலும் ஊரடங்கால் வேலையின்றி வருமானம் இன்றி தவித்து வரும் இச்சூழ்நிலையில் எங்கள் கணவன்மார்கள் காதில் கழுத்தில் உள்ளதையும் பிடுங்கி சென்று குடித்தே அழித்து விடுவார்கள் மேலும் கடந்த 40 நாட்களாக குடியை மறந்து திருந்தி உள்ளனர் இந்நேரத்தில் டஸ்மாக் கடையை திறப்பது அவர்களை மீண்டும் குடிபோதையில் தள்ளி விடும் என்பதால் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என பெண்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவம் அறிந்து விரைந்து வந்த பாலக்கோடு காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் அவர்களிடம் பேச்சுவர்த்தை நடத்தினார் தங்களது கோரிக்கைகளை மாவட்ட நிர்வாக கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு கிடைக்க செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர் இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!